முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து உயரும் வைகை அணை நீர்மட்டம்

சனிக்கிழமை, 23 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கூடலூர் : முல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 58 அடியை நெருங்கி வருகிறது.

மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனையடுத்து அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.75 அடியாக உள்ளது. வரத்து 3011 கனஅடியாகவும், திறப்பு 2150 கனஅடியாகவும் உள்ளது. இருப்பு 6055 மி.கனஅடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பின் காரணமாக லோயர்கேம்பில் உள்ள பெரியாறு மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 57.35 அடியாக உள்ளது. வரத்து 2220 கனஅடி, நேற்று முன்தினம் வரை 1119 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் 1319 கனஅடியாக அதிகரிககப்பட்டுள்ளது. நீர்இருப்பு 3115 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 300 கனஅடி, திறப்பு 300 கனஅடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.34 அடி, வரத்து 50 கனஅடி, திறப்பு 50 கனஅடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து