முக்கிய செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      சினிமா
Vijay-Antony 2021 10 24

Source: provided

கோடியில் ஒருவனைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்சுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது. பாலாஜி கே.குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்திரில்லர் படத்துக்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் தோன்றுகிறார். இன்ஃபினிட்டி பிலிம் வென்ஞ்சர்ஸ் பங்குதாரர்களான கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் பி பங்கஜ் போஹ்ரா மற்றும் விக்ரம் குமார்  ஆகியோர் தொடர்ச்சியாக படங்களை விஜய் ஆண்டனியுடன் தயாரிக்க உள்ளனர்.

மலேசியாவை சேர்ந்த லோட்டஸ் குழுமத்தின் டான் ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை, சித்தார்த்தா ஷங்கர் மற்றும் ஆர் வி எஸ் அசோக் ஆகியோருடன் இணைந்து லோட்டஸ் பிக்சர்ஸுக்கு தலைமை ஏற்றுள்ளார். இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ஆகியோர் இப்டத்தில் நடிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து