முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ல் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டிய கட்டாயம் இல்லை : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வருவது கட்டாயம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் தீபம் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவு தனியார் மருந்துவமனையின் துவக்க விழா திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஊரக தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீவிர சிகிச்சை பிரிவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை. தீபாவளிக்கு பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன; அவற்றில் இவ்வாண்டு 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்றார்.

மற்றொரு நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது

தீபாவளி பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமே என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றன. பள்ளிக்கு கட்டாயமாக வர வேண்டும் என்று அரசு கூறவில்லை. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலானவர்களுக்கும் அதையேதான் கூறியுள்ளோம். ஒரு ஒழுங்குக்கு மாணவர்கள் பழக வேண்டும் என்பதற்காகவே நவம்பர்.1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகுதான் வர முடியும் என்றால் தாராளமாக வரலாம்.

நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவு கோரி 12 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களை தி.மு.க. எம்.பி.-க்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தி, நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த ஆய்வறிக்கையை அளித்து, நீட் தேர்வு விவகாரத்தில் நமது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் பதில் வரப்பெறும்.

மாநில உரிமைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், இப்போதும் முதல் குரல் கொடுப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரத்தில் அந்த மாநில முதல்வர்கள் அளிக்கும் பதில், நமது முதல்வரின் குரலுக்கு கண்டிப்பாக வலு சேர்ப்பதாக அமையும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து