முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரிய நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரிய நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழை மக்களிடம் இருந்து தான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் ஐகோர்ட்டில் தொடுத்திருந்த வழக்கில் நீதிபதி கருத்து தெரிவிருந்தார்.

நீதிபதியின் இந்த கருத்துகள் தமிழகத்தில் விவாத பொருள் ஆனது. தொடர்ந்து வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில்,  இந்த வழக்கில் நேற்று விஜய் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்னை புண்படுத்தியுள்ளன எனக் குறிப்பிட்டிருக்கிறார். கஷ்டப்பட்டு உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நிலுவை வரித்தொகையாக ரூ.32.30 லட்சத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி செலுத்தி விட்டோம். எனது வழக்கு மட்டுமின்றி தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து கூறப்பட்டுள்ளது.

என தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்க கோரும் வழக்கில் ஐகோர்ட்டில்  நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரிய விஜய் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து