முக்கிய செய்திகள்

ஆஸி.க்கு எதிரான ஆஷஸ் தொடர்: இங்கி. அணியில் பென் ஸ்டோக்ஸ்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      விளையாட்டு
Ben-Stokes 2021 10 25

Source: provided

லண்டன் : ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜனவரியில்...

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நான்கரை மாதங்களாக கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், காயத்திலிருந்து மீண்டு நல்ல உடல்நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ஆஷஸ் தொடருக்கான அணியில் அவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. ஆர்ச்சர், ஆலி ஸ்டோன் அணியில் இல்லாத நிலையில் ஸ்டோக்ஸின் வருகை இங்கிலாந்து அணிக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து