முக்கிய செய்திகள்

துரை வைகோவுக்கு துணை நிற்பேன் - நாஞ்சில் சம்பத்

Nanjil-Sampath 2021 10 26

Source: provided

நாகர்கோவில் : துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவாகும் என்று நாஞ்சில் சம்பத் கூறி உள்ளார்.

ம.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, தினகரனை ஆதரித்தார். அதன்பின்பு தினகரனிடம் இருந்தும் விலகியதோடு கட்சி அரசியலுக்கு முழுக்கு போடுவதாகவும், இலக்கிய கூட்டங்களில் மட்டுமே பங்கேற்பேன் எனவும் கூறினார்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் நாஞ்சில் சம்பத் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பேசினார்.

அவர் மீண்டும் ம.தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுபற்றி நாஞ்சில் சம்பத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 100 ஆண்டு கால வரலாற்றில் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவர் செய்துள்ளார். மிக குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

அ.தி.மு.க.வை கைப்பற்றும் இடத்தில்தான் சசிகலா உள்ளார். அவரை யாரும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

துரை வைகோவிற்கு ம.தி.மு.க.வில் பொறுப்பு வழங்கி இருப்பது வைகோ எடுத்திருக்கும் ராஜ தந்திரமான முடிவாகும். சுமையை பகிர்ந்து கொள்வதற்காகவும், ம.தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும் துரை வைகோ ஒரு கருவியாக இருப்பார். அவரை நியமிக்காமல் வேறு யாரை நியமித்திருக்க முடியும்? 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து