முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகனுக்கு ஏ.பி.சி.டி.இ. என பெயர் வைத்த பாசக்கார தந்தை

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜகர்தா : இந்தோனேசியாவில் ஆங்கில அகர வரிசையான ஏ.பி.சி.டி.இ. என்னும் எழுத்துகளை தன் மகனுக்கு பெயராக சூட்டியுள்ளார் ஒருவர்.

தற்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான புதுமையான பெயர்களை சூட்டவே விரும்புகின்றனர். இதற்காக பல வலைதளங்களில் தேடி அதில் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ - ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். ஆங்கில அகர வரிசை எழுத்துகளான ஏ.பி.சி.டி.இ.எப். ஜி.எச்.ஐ.ஜெ.கே. ஜூஜூ (ABCDEF GHIJK Zuzu) என பெயர் சூட்டியுள்ளனர்.

12 வயதான அச்சிறுவன் பள்ளியில் தன் பெயரை எழுதியபோது ஆசிரியர்கள் உட்பட அனைவரும் கேலி செய்துள்ளனர். இது குறித்து தந்தையிடம் முறையிட்ட பின்னரே, அதுதான் உண்மையான பெயர் எனத் தெரியவந்துள்ளது. இதில் ஜூஜூ என்பது பெற்றோர்களின் பெயரில் உள்ள முதல் எழுத்துகளாகும். மேலும், தங்களுக்கு அடுத்து பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் என்.ஓ.பி.கியூ (NOPQ), ஆர்.எஸ்.டி.யூ.வி. (RSTUV) போன்ற பெயர்களை வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் அந்த குறும்புக்கார தந்தை.

முன்னதாக கடந்த ஆண்டு உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது மகனுக்கு X Æ A-12 என பெயர் சூட்டி இருந்தார். கலிபோர்னியாவின் சட்டப்படி பெயரில் எண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், எண் 12-ஐ ரோமன் 12 ஆக மாற்றி, XÆ A-XII என மாற்றிப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து