முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கம், கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில் உள்ள பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, முதல்வரிடம், இப்பள்ளியில் மொத்தம் 488 மாணாக்கர்கள் படித்து வருவதாகவும்,  தற்போது 9 முதல் 12-ம் வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும், மாணாக்கர்கள் வருகை சிறப்பாக உள்ளதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெர்னாஸ் ஜான்,  தெரிவித்தார். 

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின், வகுப்பு அறைகளுக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களிடம் உரையாடினார், கல்வியில் மிகுந்த கவனம் செலுத்துவதோடு, ஆசிரியர்கள், மாணாக்கர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  

பின்னர், பள்ளியின் அனைத்து வகுப்பு அறைகள், ஆய்வகம், உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவற்றையும் முதல்வர் பார்வையிட்டதோடு, மாணாக்கர்களுக்கு தினசரி உணவு வழங்கும் பட்டியலில் உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.   இந்நிகழ்வில், அமைச்சர் பொன்முடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து