முக்கிய செய்திகள்

பிரிட்டன், ஜெர்மனியில் வேகமாக பரவும் 'ஏ.ஒய்.4.2' கொரோனா தொற்றுக்கு கர்நாடக மாநிலத்தில் 7 பேர் பாதிப்பு

AY -4 2-Virus 2021 10 27

Source: provided

பெங்களூரு : பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கர்நாடாவிலும் பரவியுள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வரும் புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ்  கர்நாடாவிலும் பரவியுள்ளது. அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கர்நாடகாவில்  7 ஆக அதிகரித்துள்ளது. 

பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆணையர் டி ரன்தீப் கூறியதாவது:  கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் 3 பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 பேரும் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த புதிய வகை தொற்றை கண்காணிக்க மத்திய அரசுடன் இணைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. புதிய வகை தொற்று பாதிப்பால் உயிரிழபு எதுவும் ஏற்படவில்லை. எனினும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து