முக்கிய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது வெற்றி

pak-win--2021-10-27

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக், ஆசிப் அலி ஆகியோர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

134 ரன்கள்...

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் ஷார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மற்றும் டேவன் கான்வே 27 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பாக். வெற்றி...

 

இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 33 ரன்கள் எடுத்தனர். ஆசிப் அலி 27 ரன்னும், ஷோயப் மாலிக் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து