முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 29 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கிய போதும் எளிமையான மனிதராகவே புனீத் ராஜ்குமார் இருந்தார். 

 

தலைவர் கலைஞரின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலை தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது.  புனீத் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனீத் ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து