முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனித் ராஜ்குமார் உடலுக்கு சரத்குமார் நேரில் அஞ்சலி

சனிக்கிழமை, 30 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : புனித் ராஜ்குமாருக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் சரத்குமார். அவரது உடலைப் பார்த்துக் கதறி அழுதார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது திடீர் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகவும் பிரபலமான நடிகர் என்பதால், கர்நாடக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவரது உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று கன்டீரவா மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அந்த மைதானம் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அழுகுரல் விண்ணை தொடுவதாக இருந்தது. மைதானம் முன்பு அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்ததால், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு ரசிகர்கள் வரிசையில் நின்று புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்கள் மட்டுமின்றி கன்னட நடிகர்கள் யஷ், துனியா விஜய் உள்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா, நடிகர் - இயக்குநர் பிரபுதேவா, சரத்குமார் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார் சரத்குமார். அங்கிருந்தவர்கள் அவரைத் தேற்றினார்கள். சென்னையில் சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடைபெற்றபோது, தனது குடும்பத்தினருடன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார் புனித் ராஜ்குமார்.

புனித் ராஜ்குமார் மறைவு தொடர்பாக சரத்குமார் தனது டுவிட்டர் பதிவில், "எனது இனிய நண்பர் புனித் ராஜ்குமார் மறைந்துவிட்டார் என்ற நம்பமுடியாத செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர். நமது நாட்டின் ஒட்டுமொத்தத் திரைத்துறையைக் குறிப்பாக கர்நாடக திரைத் துறையினரை இந்த சோகத்திலிருந்து தேற்ற, ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து