முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிக்கு குவியும் பாராட்டுக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

விநோதய சித்தம் என்ற படம் தற்போது ஓடிடியில் வெளியாகி பலரது பாராட்டடையும் பெற்று வருகிறது. படத்தின் கதை. கதாநாயகனான தம்பி ராமைய்யா மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தனது 25வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், திடீரென ஒரு விபத்தில் சிக்கி மரணமடையும் அவரை அழைத்துச் செல்ல காலன் வருகிறான்.

தனக்கு நிறைய வேலைகள் இருப்பதால் சற்று அவகாசம் தரும்படி கேட்கிறார் தம்பி ராமைய்யா. 90 நாட்கள் அவகாசம் தருகிறான் காலன். அந்த 90 நாட்களில் ராமைய்யாவுக்கு  ஏற்படும் புரிதல்கள்தான் மீதிப் படம். . காலனாக நடித்து படத்தை இயக்கியிருப்பவர் சமுத்திரக்கனி. வித்தியாசமாக அதே வேளையில் சிந்திக்க வைக்ககூடிய படைப்பாக இந்த விநோதய சித்தம் என்ற படத்தை இயக்கிய கனி(எ)சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து