முக்கிய செய்திகள்

ஜி.விக்கு உதவிய ஞானவேல்

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
GV-Prakash 2021 10 31

Source: provided

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயில்'. இந்த திரைப்படத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா படத்தை வாங்கி வெளியிடுகிறார். க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இப்படத்தை, தயாரித்துள்ளார்.

தேன் திரைப்பட நடிகை அபர்ணதி இதில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், 'பசங்க' பாண்டி, நந்தன் ராம்,  ரவி மரியா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் ஏராளமான நாடக நடிகர்களும், நடித்துள்ளனர். படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டராக ரேமண்ட் டெரிக் கிரஸ்ட்டா பணியாற்றியுள்ளார். இப்படத்தில் தனுஷ் பாடிய காத்தோடு காத்தானேன் பாடல் யூடியூப்பில் இரண்டு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து