முக்கிய செய்திகள்

தீபாவளி தினத்தில் வெளியாகும் எனிமி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Enemy 2021 10 31

Source: provided

விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக தீபாவளிக்கு வெளியாகிறது எனிமி திரைப்படம். இதனையொட்டி படக்குழுவினரின்  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. விஷால்,ஆர்யா, மிருணாளினி,  கருணாகரன்,  இயக்குநர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது விஷால் பேசுகையில்,  ஆனந்த் சங்கர் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்,  அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்குங்கள் என்று சொன்னேன். சில தினங்களுக்கு பின்னர் அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் ஆர்யா என்னை அடி வெளுத்து விட்டார். ஏற்கனவே அவருடன் அவன் இவன் படம் செய்திருக்கிறேன் இந்தப்படமும் சூப்பராக வந்துள்ளது. இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும் போது கூட இதே ரசனையோடு இருக்கும்.  அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன் என்றார்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து