முக்கிய செய்திகள்

இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

திங்கட்கிழமை, 1 நவம்பர் 2021      சினிமா
Surya 2021 11 01

Source: provided

சென்னை : இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் இன்று நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து