முக்கிய செய்திகள்

ஜெய்பீம் - திரைவிமர்சனம்

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      சினிமா
Jai-Bem 2021 11 03

Source: provided

தா.செ.ஞானவேல் இயக்கத்தில்,  சூர்யா நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்த படம் தீபாவளி வெளியீடாக 5 மொழிகளில் வெளிவந்துள்ளது. கதை: 

காவலர்கள் சட்டத்திற்கு புறம்பாக சில வழக்குகளை மலை அடிவார மக்கள் மற்றும் அவர்களது சமூகத்தினரின் மீது சுமத்தி வழக்குகளை முடிக்கின்றனர். காவலர்களால் பாதிக்கப்பட்ட மலை அடிவார மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி தீர்ப்பை பெறுகிறார் நாயகன் சூர்யா. 1995- களில் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் தா.செ.ஞானவேல். செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற இருளர் இன ஜோடி வாழ்ந்து வருகிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகிறார்.  செங்கேனி தனது கணவனைத் தேடும் முயற்சியில் வக்கீல் சூரியாவின் உதவியை நாடுகிறார். சூர்யாவின் நேர்மையான கடும் உழைப்பால், பழங்குடிப் பெண்ணுக்கு நீதியை வழங்குவதற்காகச் சத்தியத்தை வெளிக்கொணர எப்படி எல்லாம் பாடுபடுகிறார் என்பது தான் ‘ஜெய் பீம்’ படத்தின் கதையாகும். இதில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் ஜே.கே உள்ளிட்ட பலர்

நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மொத்தத்தில் இந்த படம் தமிழ் சினிமாவுக்கும் மட்டும் அல்ல உலக சினிமாவுக்கு சாவல் கொடுக்கும் ஒரு படம் .  இயக்குனர்  தா.செ.ஞானவேல் மிக சிறந்த ஒரு படைப்பாளி என்பதை நிருபித்துள்ளார்.  காட்சிக்கு காட்சி நம்மை பிரமிக்க வைத்துள்ளார் இயக்குனர். படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் நம்மை மிகவும் கவர்ந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நிச்சயம் விருதுகள் குவியும் என்பதில் எந்தவித சந்தேகம் இல்லை குறிப்பாக சூர்யா ராஜகன்னாக நடித்த மணிகண்டன் செங்கிநியாக நடித்த லிஜாமோல் ஜோஸ் போன்றவர்களுக்கு மற்றும் இயக்குனருக்கும் விருது நிச்சயம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து