முக்கிய செய்திகள்

இன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படம்

புதன்கிழமை, 3 நவம்பர் 2021      சினிமா
annatha-2021 11 03

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் இன்று வெளியாகிறது.

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ திரைப்படத்தில்  ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினி காந்த்தின் தங்கையா கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.  டி.இமான் இசையமைப்பில் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் ‘அண்ணாத்த’ தீபாவளியை முன்னிட்டு இன்று (நவம்பர் 4 ஆம் தேதி) திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து