முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி 7-ல் ரிலீசாகிறது ஆர்.ஆர்.ஆர்.

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தை அடுத்து  தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டிவருகிறது.

மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நட்பு' பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதம் 10ஆம் தேதி 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் வெளியாகும் என படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து