முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1970-ன் கதை - டைகர் நாகேஸ்வர ராவ்

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மாஸான இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி தேஜா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி வருகிறார். இந்த படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. படத்துக்கு ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவு செய்ய,  ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து