முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாத்த - திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ள படம் அண்ணாத்த. சிவா இயக்கத்தில் டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படத்தில் ஊராட்சி மன்ற தலைவராக நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இவர் அநியாயத்தை தட்டி கேட்டு அடிதடியில் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் தங்கை கீர்த்தி சுரேஷ் வெளியூரில் தங்கி படிக்கிறார். தங்கை மீது அதிக பாசமாக இருக்கிறார் ரஜினி. தங்கைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் செய்து வைக்கும் நிலையில் பிரச்சனை ஏற்படுகிறது. ரஜினிக்கு வந்த பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. காளையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஜினி காமெடி, ஆக்ஷ்ன், சென்டிமென்ட் என தனக்கே உரிய பாணியில் அசத்தி இருக்கிறார்.

ரஜினிக்கு தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து இருக்கிறார். குஷ்பு, மீனா, வழக்கறிஞராக வரும் நயன்தாரா, வில்லனாக வரும் ஜெகபதி பாபு ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் படங்கள் பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் அண்ணாத்த படமும் இடம்பெற்றுள்ளது. படத்தின் முதல் பாதியைவிட இரண்டாம் பாதி  விறுவிறுப்பாக செல்கிறது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிட்டது. மொத்தத்தில் இந்த ‘அண்ணாத்த’  இரண்டாம் பாசமலர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து