முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனிமி - திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார். தீபாவளியன்று அண்ணாத்த படத்துடன் எனிமியாக களம் இறங்கியுள்ளது இப்படம். கதை: விஷால், ஆர்யா இருவரும் சிறு வயது நண்பர்கள். ஆர்யாவின் தந்தை பிரகாஷ் ராஜ் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி. திடீரென ஒருநாள் பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுகிறார். இதனால் நண்பர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் எனிமிகளாக சிங்கப்பூரில் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

விஷால், ஆர்யா இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக வரும் மிர்ணாளினி ரவி மற்றும் மம்தா மோகன்தாஸ் இருவரும் கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா இருவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மொத்தத்தில் இந்த எனிமியிடத்தில் ஏதோ இருக்கு ஆனா இல்ல. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து