முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்‌ஷன் படம் ரொம்ப பிடிக்கும் - விக்ரம் பிரபு

ஞாயிற்றுக்கிழமை, 7 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் பாயும் ஒளி நீ எனக்கு. இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும், வாணிபோஜன் நாயகியாக நடிக்கிறார்கள். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.

இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு ஸ்ரீதர், சாகர் என்பவர் இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில்  நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விக்ரம், இந்த படத்தில் இயக்குனரின் பணியும் ஒளிப்பதிவாளரின் பணியும் மிகவும் அருமையாக இருந்தது.

எல்லாவற்றையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் லைட்டிங்  மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர். அதனை உடனிருந்து நான் பார்த்தேன். பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் பலர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். பொதுவாக ஆக்‌ஷன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ஆக்‌ஷன் மிக வித்தியாசமாக இருக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து