முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி போட்டி

ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சண்டிகார் : அடுத்த நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தற்போதே  காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் களப் பணியை தொடங்கியுள்ளன.  இந்த நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் நடிகர் சோனு சூட்டின் சகோதரி  மல்விகா சூட் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகாரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நடிகர் சோனு சூட் இந்தத் தகவலை தெரிவித்தார். எனினும், எந்த கட்சி சார்பில் போட்டியிடுவார் என்ற தகவலை  சோனு சூட் தெரிவிக்கவில்லை.  

மேலும் நடிகர் சோனு சூட் கூறுகையில்,  எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல. எனது சகோதரி சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வார் என்று தெரிவித்தார். எனினும், ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே சிறந்த கட்சிகள்தான் என்றும் சோனு சூட் பேட்டியின் போது குறிப்பிட்டார். 

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்தல், ஆக்சிஜன் சிலிண்டர் வசதி என  பல்வேறு உதவிகளை செய்து நடிகர் சோனு சூட் இந்திய அளவில் பல தரப்பினராலும் சோனு சூட் பாரட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து