முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

கெளதம் மேனன் இயக்கத்தில், வெந்து தணிந்தது காடு' என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான விடிவி எனப்படும் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.  முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளது. அங்கு 28 நாட்கள் வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து