முக்கிய செய்திகள்

வெற்றி நடிக்கும் ரெட் சேன்டில்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Red-Sandil 2021 11 15

Source: provided

தமிழகத்தின் வட மாவட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக  'ரெட் சேன்டில்’ படம் வெளிவரவுள்ளது. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார். மேலும்,  எம்.எஸ்.பாஸ்கர், கருடா ராம், கணேஷ் வெங்கட்ராம்  உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது,  2015 ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம் கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியுள்ளது என்றார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நிறைவு பெற்றதை அடித்து, விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து