முக்கிய செய்திகள்

வேலை தேடும் சந்தானம்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Santhanam 2021 11 15

Source: provided

சபாபதி என்ற படத்தில் வேலையில்லாத திக்குவாய்  இளைஞனாக சந்தானம் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சந்தானத்துடன் புகழ், எம்.எஸ்.பாஸ்கர், சாயாஷி ஷிண்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாச ராவ் படத்தை இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் விநியோக உரிமையை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ்  வாங்கியதுடன் நவம்பர் 19 அன்று இப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளதாகம் அறிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய படக்குழுவினர், ஹாலிவுட் படமான ரோல் மாடல்ஸ் திரைப்படத்துக்கும், சபாபதி கதைக்கும்  எந்த சம்பந்தமுமில்லை என்றனர். மேலும், சந்தானத்தின் வழக்கமான  படங்கள் போல் இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான படமாக இந்த சபாபதி இருப்பார் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து