முக்கிய செய்திகள்

திரையரங்கில் வெளியாகும் மரைக்கார்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Mohanlal 2021 11 15

Source: provided

கோழிக்கோடைச் சேர்ந்த இஸ்லாமியரான மரைக்கார் வெள்ளையர்களுக்கு எதிராக நடத்திய கடற்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம் தான் மரைக்கார் படம். இவர்தான் வெள்ளையனுக்கு எதிராக முதன் முதலில் கடற்படை அமைத்தவராம். பெரும் பொருட்செலவில் மலையாளம்,  தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் சீன நடிகர்களின் உழைப்பில் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். படத்தை ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி நிறுவனங்கள் முயன்ற போது, மோகன்லால், ப்ரியதர்ஷன், ஆண்டனி பெரும்பாவூர் மூவரும் படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி மரைக்கார் படம்  டிசம்பர் 2 ஆம்  தேதி திரையரங்கில் வெளியாகும் என்று கேரள அமைச்சர் ஷாஜி செரியன் அறிவித்தார்.  டிசம்பர் 2 படம்  திரையரங்கில் வெளியாவதை உறுதி செய்து மோகன்லாலும் ட்வீட் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து