முக்கிய செய்திகள்

பாலிவுட் செல்லும் இசையமைப்பாளர் அம்ரீஷ்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Amrish 2021 11 15

Source: provided

‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் - 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட எராளமான படங்களுக்கு இசையமைத்தவர் அம்ரீஷ். தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்திருப்பவர். சமீபத்தில் இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் பாலிவுட் ஸ்டாரான மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘நாகமதி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து பாலிவுட்டுக்கு போகும் தமிழ் இசையமைப்பாளர்கள் வரிசையில் அம்ரீஷும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ‘நாகமதி’ படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து