முக்கிய செய்திகள்

ஐஎம்டிபியில் முதலிடம் பிடித்த ஜெய் பீம்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Jay-Bhim 2021 11 15

Source: provided

ஹாலிவுட் படங்களை முந்திக்கொண்டு ஐஎம்டிபி ரேட்டிங்கில் அதிரடியாக முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது ஜெய் பீம் படம். தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்’  படம் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா தயாரித்து நடித்த இந்தப் படம், 5 மொழிகளில் வெளியானது. வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ஐ.எம்.டி.பி (IMDB) ரேட்டிங்கிற்கு உட்படுத்தப்படுவது வழக்கம். இதில் உலகமெங்கும் தயாரிக்கப்படும் படங்கள் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ரேட்டிங்கில் ஆல் டைம் முதல் படமாக 1994-ஆம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படமான ‘தி ஷாசாங் ரெட்டிம்சன்’ உள்ளது. அடுத்த இடத்தில் 1972-ஆம் ஆண்டில் வெளியான ‘தி காட்பாதர்’ இருக்கிறது. மூன்றாவது இடத்தில் 2008-ஆம் ஆண்டில் வெளியான ‘தி டார்க் நைட்’ உள்ளது. இந்தப் படங்கள் 10க்கு 9 முதல் 9.3 வரை ரேட்டிங் பெற்றிருந்தன.  ஆனால், ஜெய் பீம் 10க்கு 9.6 என்ற ரேட்டிங்கை பெற்றிருப்பதால்தால், ஐ.எம்.டி.பி ரேட்டிங்கில் அதிரடியாக முன்னேறியுள்ளது. இந்தியப் படம்  ஒன்று, இவ்வளவு பெரிய ரேட்டிங்கை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து