முக்கிய செய்திகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Sivakarthikeyan 2021 11 15

Source: provided

சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள படம் டான். இந்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் இணைந்து தயாரித்து வரும் இந்த 'டான்' படத்தை அட்லியின் உதவி இயக்குநரான சி.பி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்து வரும் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து