முக்கிய செய்திகள்

கிராண்மா – புது ரக பேய் படம்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Sonia-Agarwal 2021 11 15

Source: provided

ஹாலிவுட் தரத்தில் 'கிராண்மா' என்கிற பெயரில் ஒரு பேய்ப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். மலையாளப் படங்களில் நாயகனான ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  சார்மிளா ஆகியோர் நடித்துள்ளனர். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது . படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் இருக்கவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர். 

படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஷிபின். ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி.கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை - சங்கர் ஷர்மா, GMA பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர், மற்றும் விநாயகா சுனில் இப்படத்தை  தயாரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து