முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டங்கள் வாபஸ்: அரசியல் தலைவர்கள் வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சத்தியாகிரகத்தின் மூலமும், அநீதிக்கு எதிராகவும் பெறப்பட்ட இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்,ஜெய்ஹிந்த் விவசாயிகள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.   மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

விவசாயிகளின் நீண்டகால பிரச்சினையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டு வந்தார் என்று பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பா.ஜ.க. உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டு விடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறியுள்ளார். 

ம.தி.மு.க  பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து