முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.விற்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள்: மேற்குவங்க முதல்வர் மம்தா கருத்து

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பா.ஜ.க.விற்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ள மத்திய அரசின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது., பா.ஜ.க, உங்களுக்கு செய்த கொடுமையால் துவண்டு போகாமல், இடைவிடாமல் போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து