முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை நகராக 5-வது முறை தேர்வான இந்தூர்: தூய்மையான மாநிலத்திற்கான விருதை 'சத்தீஷ்கர்' வென்றது

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தூய்மையான மாநிலத்திற்கான விருதை சத்தீஷ்கர் பெற்றுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இதற்கான விருதை வழங்கினார்.

தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்‌ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். 

இதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நகரங்களில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017 முதல் 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் முதலிடத்தை இந்தூர் பிடித்தது.  இதற்கான விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். 

தூய்மையான நகரங்கள் பட்டியலில் சூரத், விஜயவாடா, நவி மும்பை, புது டெல்லி, அம்பிகாபூர், திருப்பதி, புனே, நொய்டா, உஜ்ஜைன் ஆகிய நகரங்கள் முறையே அடுத்தத்த இடத்தில் உள்ளன. 25 நகரங்கள் கொண்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் லக்னோ 25- வது இடத்தில் உள்ளது.  தூய்மையான மாநிலத்திற்கான விருதை சத்தீஷ்கர் தட்டிச்சென்றுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து