முக்கிய செய்திகள்

ஜாங்கோ விமர்சனம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Jango-Review 2021 11 22

Source: provided

டைம் லூப்பில் சிக்கி படாதபாடு படும் இளம் மருத்துவரின் கதை தான் இந்த ஜாங்கோ படம். மருத்துவர் சதீஷ்குமாருக்கு முதல்நாள் நடக்கும் சம்பவங்களே மறுநாளும் அதற்கடுத்த நாளும் நடக்கிறது. இந்த வித்தியாசமான நிகழ்வால் தன் மனைவியை யாரோ சுட்டுக்கொல்லப் போவது தெரிய வருகிறது. மனைவியை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிக்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் அவரை தடுக்கிறது. கடைசியில் மனைவியை காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு படத்தின் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது. புதுமுக நடிகர் சதீஷ்குமார் முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக் களத்தை தேர்வு செய்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. சதீஷ்குமார் மனைவியாக மிருணாளினி நடித்திருக்கிறார். திரும்ப திரும்ப ஒரே காட்சியும் அதை தொடர்ச்சியாக காட்டுவதும் ஒரு கட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. விண்ணிலிருந்து வரும் எரிகல், கதீர் வீச்சை கக்கும் எந்திரம், அந்த எந்திரத்தை அழிக்க விஞ்ஞானி கண்டுபிடிக்கும் ஜாங்கோ எந்திரம் என ஹாலிவுட் தரத்துக்கு காட்சிகளை டிசைன் செய்திருக்கிறார் இயக்குனர் மனோ கார்த்திகேயன். சி.வி குமாரின் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில், கிராபிக்ஸ் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. மொத்ததில் ஜாங்கோ  விஞ்ஞான ரீதியிலான டைம் லூப் படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து