முக்கிய செய்திகள்

குடும்ப ஒற்றுமையை சொல்லும் ராஜவம்சம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Sasikumar-Nikki 2021 11 22

Source: provided

தனிக்குடும்பத்தையே விரும்பும் இக்காலகட்டதில் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், உறவுகளின் பெருமைகளையும் கூறும் படமாக அமைந்து இருக்கின்றது ராஜவம்சம் திரைப்படம். இப்படத்தை சுந்தர் சி யின் உதவி இயக்குனரான கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார், ரேகா, சுமித்ரா உள்ளிட்ட 49  நட்சத்திர பட்டாளங்களுடன் எந்த வித பிரச்சனைகளுமின்றி அருமையாக எடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் கதிர்வேலு. படத்துக்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ்  இசை அமைத்துள்ளார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் TD ராஜா தயாரித்துள்ள இத் திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து