முக்கிய செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆஸ்திரேலியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      உலகம்
Austria 2021 11 23

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய பொது முடக்கம் அமலுக்கு வந்தது. 

பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில நாட்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. கடந்த சில வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து அந்நாடுகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் முதல் தொடங்கிய பொதுமுடக்கமானது 10 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பணிக்கு செல்வது, மாளிகைப்பொருட்கள் வாங்குவது, மருத்துவர்களிடம் செல்வது அல்லது உடற்பயிற்சி உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களை மூடவும், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும் அதிபர் அலெக்ஸாண்டர் அறிவித்துள்ளார்.  கொரோனா தொற்று பரவ தொடங்கியதற்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் 4-வது முறையாக தற்போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து