முக்கிய செய்திகள்

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: ரகானே தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021      விளையாட்டு
Raghane 2021 11 23

Source: provided

மும்பை : புஜாரா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்துள்ளது.

ராகுல் காயம்...

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ம் தேதி (நாளை)  கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கே.எல். ராகுல் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப்பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரகானே கேப்டன்...

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ரகானே (கேப்டன்), 2. மயங்க் அகர்வால், 3. புஜாரா (துணைக் கேப்டன்), 4. ஷுப்மான் கில், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. சூர்யகுமார் யாதவ், 7. விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), 8. கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), 9. ஜடேஜா, 10. அஸ்வின், 11. அக்சார் பட்டேல், 12. ஜெயந்த் யாதவ், 13. இஷாந்த் சர்மா, 14. உமேஷ் யாதவ், 15. முகமது சிராஜ், 16. பிரசித் கிருஷ்ணா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து