முக்கிய செய்திகள்

சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்த செந்நிற நண்டுகள்

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      உலகம்
Red-crabs 2021 11 24

ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம். இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன.

 

சில இடங்களில் லட்சக்கணக்கான நண்டுகள் சாலையில் இடம்பெயர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான செந்திற நண்டுகளின் இந்தப் பயணம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து