முக்கிய செய்திகள்

19-வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி மீட்பு

புதன்கிழமை, 24 நவம்பர் 2021      உலகம்
Grandmother 2021 11 24

19-வது மாடியில் இருந்து தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 82 வயது பெண்மணி ஒருவர் 19-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அவர் அதிர்ஷ்டவசமாக 18-வது மாடியில் இருக்கும் துணியை காயப்போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கால்கள் 18-வது மாடியிலும், உடல் பகுதி 17-வது மாடியிலும் இருந்தன. 

 

இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.  இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து