எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரமடையவுள்ளதால் தமிழகத்தில் ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட
7 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அது தாமதமாகி உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவில்லை. அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆகிறது. அது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமாகி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும்.
இதன் காரணமாக ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மற்ற வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
இன்று (25-ம் தேதி) ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், இதர வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (26-ம் தேதி) தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதுநகர் சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
27-ம் தேதி: கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
28-ம் தேதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கன மழையும், நீலகிரி, கோயம்புத்தூர் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் போடிநாயக்கனூர், ராமநாதபுரம் கே.வி.கே. பகுதியில் தலா 13 செ.மீ மழையும், சங்கரன்கோவிலில் 6 செ.மீ, ராமேஸ்வரம், கூடலூர், வீரபாண்டி, ஆயிக்குடி, கடலாடி, ஆழியார் சூரங்குடியில் தலா 5 செ.மீ, தேக்கடியில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.
வாலினோக்கம், திருவாடானை, மாயனூர் மண்டபம், முதுகுளத்தூர், ராமநாதபுரம், பாம்பன், கொடுமுடி, சிவகாசி, கழுகுமலை, கடம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், காயல்பட்டினம், ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
இன்று குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 26-ந்தேதி தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 27, 28-ம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.