முக்கிய செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      உலகம்
Netherland 2021 11 27

தென்னாப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு நெதர்லாந்து தடை விதித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  பி 1.1.529 என்ற புதிய வகை கொரோன வைரசில்  ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த வைரசுக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகளை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக கூறியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அண்டை நாடுகளிலும் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தென்ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் ஒவ்வொன்றாக தடை விதித்து வருகின்றன.

ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை நேற்று இதற்கான உத்தரவை பிறப்பித்தன. முன்னதாக இங்கிலாந்தும் தடை உத்தரவை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியனில்ல உள்ள ஒவ்வொரு நாடாக தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து வருகின்றன.  ஐரோப்பாவை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டிலும், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, எஸ்வாத்தினி, லெசோத்தோ, மொசாம்பிக், நமீபியா, மற்றும் ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகளின் விமானங்கள் தரை இறங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தென்னாப்பிரிக்காவில் புதுவகை உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்துவரும் விமானங்களுக்கு நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து