முக்கிய செய்திகள்

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      இந்தியா
Kashmir 2021 07 16

Source: provided

ராஞ்சி : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்ஸல் அமைப்பின் முக்கியத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுக்மா மாவட்டத்தில் மாவட்ட ரிசர்வ் பிரிவு, சிஆர்பிஎப் பின் கோப்ரா படையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டாட்மெட்லா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் மறைந்திருந்த நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நக்ஸல் முக்கியத் தளபதியான பஸ்தா பீமா என்பவர் கொல்லப்பட்டார். இவரது தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து