முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நியூசி. பெண் எம்.பி.

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வெல்லிங்டன் : நியூசிலாந்து எம்.பி. ஜூலி அன்னே ஜெண்டர், மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று பிரசவம் பார்த்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நேற்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து விட்டது. 

மருத்துவமனைக்கு செல்வதற்காக அதிகாலை 2:00 மணிக்கு எழுந்த போது, என் பிரசவ வலி அவ்வளவு மோசமாக இல்லை. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 2 - 3 நிமிடங்கள் ஆகும். இருந்த போதும், அங்கு சென்ற 10 நிமிடங்களில் பிரசவ வலி அதிகரித்தது. இப்போது, எங்களிடம் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறந்து உள்ளது என தெரிவித்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமெரிக்காவின் மின்னிசோட்டாவில் பிறந்த ஜூலி அன்னேஜெண்டர், கடந்த 2006-ம் ஆண்டு நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில், பல பணிவான அரசியல்வாதிகள் உள்ளனர். அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா ஆண்டர்சன், பதவியில் இருக்கும்போது, மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வரும் போது, தனது 3 மாத கைக்குழந்தையுடன் வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து