முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை: 95 விரைவு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரெயில்வே

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டதை அடுத்து நாளை வரை 95 விரைவு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மெல்ல அது மேற்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. பின்னர் அது, வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக  வலுப்பெறும். அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக் கடலின் மத்திய பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நாளை (டிசம்பர் 4-ம் தேதி) காலை தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை அடைய வாய்ப்புள்ளது" என கூறப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மார்க்கமாக செல்லும் 95 எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்கள் அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை வரை (டிசம்பர் 4-ம் தேதி) இந்த உத்தரவு நடைமுறையில்  இருக்கும் என்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே தெரிவித்துள்ளது. 

இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

  • * புவனேஸ்வரம் - ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில் (20896).
  • * புருலியா - விழுப்புரம் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் (22605).
  • * ஹவுரா  - சென்னை சென்ட்ரல் கொரமண்டல் அதிவேக விரைவு ரயில் (12841).
  • * ஹவுரா  - மைசூரு வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22817).
  • * சந்திரகாசி  - சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் (22807).
  • * ஹவுரா  - யஷ்வந்த்பூர் அதிவேக விரைவு ரயில் (12863).
  • * ஹவுரா  - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் (12839).
  • *  சில்சார் - திருவனந்தபுரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (12508).
  • * பாட்னா - எர்ணாகுளம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22644).
  • * சென்னை சென்ட்ரல்  - ஹவுரா கொரமண்டல் அதிவேக விரைவு ரயில் (12829).
  • * சென்னை சென்ட்ரல்  - புவனேசுவரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (12829).
  • * சென்னை சென்ட்ரல்  - ஹவுரா வாராந்திர அதிவேக விரைவு ரயில் (12840).
  • * திருச்சி - ஹவுரா வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் (12664).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து