முக்கிய செய்திகள்

இந்தியாவிலும் பரவிய ஒமைக்ரான்: பதற்றம் வேண்டாம் - அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 2 டிசம்பர் 2021      தமிழகம்
Radhakrishnan 2021 07 03

இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக மக்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்., இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், தென்னாப்ரிக்காவிலிருந்து நேற்றிரவு பெங்களூரு வந்துள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு வயது 66. மற்றொருவருக்கு வயது 46. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழிப்புணர்வுடன், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்டா கொரோனாவை விட 5 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது ஒமைக்ரான் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவியது உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் யாரும் பதற்றம் அடையாமல் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து