முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் காலங்களில் மக்களை காக்க நிரந்தர தீர்வு காண குழு அமைப்பு: ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

பேரிடர் காலங்களில் மக்களை காக்க நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும் அவரை திறன்பட வெல்லக் கூடியதாக தமிழக அரசும், அதனுடைய நிர்வாகமும் இருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். முன்பு ஏற்பட்ட இறப்பு மற்றும் பாதிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிகவும் குறைவு தான். நான் உழைத்தேன். காலை, மாலை என இரவு பகல் பாராமல் மழையில் நனைந்தபடியும் மக்களை சந்தித்தேன் என ஊடகங்கள் நம்மை பாராட்டிகொண்டிருக்கிறது. பொதுமக்களும் பாராட்டுகிறார்கள். இது எனக்கு கிடைத்த தனிப்பட்ட பாராட்டாக நான் கருதவில்லை.

தமிழக அரசே மழையில் நனைந்து மக்களை காப்பாற்றி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்த பாராட்டை நான் பார்க்கிறேன். இதுபோன்ற பேரிடர் ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொது சொத்துக்கள், உள்கட்டமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை வெகுவாக குறைத்து தமிழகத்தை அனைத்துவகை பேரிடர்களில் இருந்து திறம்பட எதிர்கொள்ள முடியும், அதற்கான திட்டமிடல்களை தொடங்குவதற்கான கூட்டம் தான் இது. பேரிடர் தடுப்பு பணிகள் என்பது பேரிடர் காலங்களில் மக்களை காப்பது மட்டும் அல்ல. அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை ஏற்படுத்துவது தான் மிக மிக முக்கியமானது. இதற்கு நிரந்த தீர்வு காண வேண்டும். அதற்காக தான் திருப்புகழ் தலைமையில் இந்த குழு அமைத்துள்ளோம்.

சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மை குழுவில் உள்ள நீங்கள் விரிவான திட்டங்களை உடனடியாக அரசுக்கு வழங்க வேண்டும். சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநில பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கிட வேண்டும். வெள்ளத்தடுப்பு மட்டுமின்றி, நீர்மேலாண்மை குறித்து திட்டம் தீட்டி வழங்க வேண்டும். பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும்.

நான் தூத்துக்குடி சென்றபோது அதிகாரிகள் தெரிந்து கொண்டிருப்பதை விட அப்பகுதி மக்கள் நிறைய தெரிந்து வைத்துள்ளார்கள். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன்மூலமாக ஏற்பட்ட விளைவின் காரணமாக தான் தி.நகரின் மழைநீர் தேங்கியது. இதேபோல் தான் தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்குகிறேன் என்று சொல்லி அங்கு கால்வாய்களை அடைத்து வைத்துள்ளார்கள். சென்னையில் அதிக மழை பெய்தால் தண்ணீர் தேங்குகிறது என்று சொன்னால் அனைத்து பகுதிகளிலும் அனைத்து வகையான வடிகால் அமைப்பு முறை இல்லை.

ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடல் தேவை. இவை அனைத்தும் செய்தாக வேண்டும். திட்டமிடல் மேற்கொள்ள பல மாதங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர்  பணீந்திர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து