முக்கிய செய்திகள்

அடுத்தடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணியை மிரட்டிய படேல்

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      விளையாட்டு
Ajaz-Patel- 2021 12 03

ஈரப்பதம் காரணம்...

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டி மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கி இருந்தது.

நல்ல தொடக்கம்...

இந்நிலையில், இந்தப் போட்டியில் முதல் பேட் செய்த இந்திய அணி 80 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் நல்ல தொடக்கத்தை கொடுத்திருந்தது. இருப்பினும், அதற்கடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. கில், புஜாரா, விராட் கோலி என மூவரது விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருந்தார் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல்.

3 விக்கெட்கள்...

கில் விக்கெட்டை அவுட்சைட் எட்ஜ் முறையிலும், புஜாராவை கிளீன் போல்ட் செய்தும், கோலியை LBW முறையிலும் அவுட் செய்திருந்தார் அஜாஸ். 28 மற்றும் 30 என அடுத்தடுத்து இரண்டு ஓவர்கள் வீசி இந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் அவர். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக இந்த மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார் அஜாஸ் படேல். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பு குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து