முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டோஸ் போட்டவர்களுக்கு குலுக்கலில் ஸ்மார்ட் போன் பரிசு : குஜராத் மாநில நகராட்சியின் கவர்ச்சிகர அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ராஜ்கோட் : இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகிறது.  கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 2-வது டோஸ் 12 வாரங்களில் இருந்து 14 வாரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவேக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 28 நாட்களுக்குப் பிறகு 2-வது டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் 2-வது டோஸ் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டால் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.  இதனால் ஒவ்வொரு மாநில அரசுகளும் 2-வது டோஸ் செலுத்தாதவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான இடங்களில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மக்களை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரவைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி, ஸ்டார்ட் போன் திட்டத்தை அறிவித்துள்ளது.  டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து டிசம்பர் 10-ம் தேதிக்குள் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டவர்கள்  பெயர்கள் சேரிக்கப்பட்டு, குலுக்கல் போட்டி நடைபெறும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும். அதேபோல், டிசம்பர் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் நகர சுகாதார மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் அமித் ஆரோரா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து